ஒரே நாளில் 1000 விமானங்கள் ரத்து - என்ன காரணம்?
அமெரிக்காவில் ஒரே நாளில் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
அமெரிக்கா, நியூயார்க் நகரில் ஒரே இரவில் 10 அங்குலத்திற்கும் அதிகமாக பனி பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பநிலை உறைநிலைக்கு கீழே சரிந்துள்ளது. அதனை முன்னிட்டு, 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் சுமார் 4,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன.
தொடர்ந்து தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், பனிப்புயல் வடகிழக்கு நோக்கி நகர்வதால் சாலை பயணங்கள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
பனி பொழிவு
இந்த புத்தாண்டின் உச்சகட்ட பயண நேரத்தில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக, 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான பயணிகள் விடுமுறை முடிந்து வீடு திரும்ப முடியாமல் விமான நிலையங்களிலேயே தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.