தைவானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா இரும்பு கவசம் போல் நிற்கும் : நான்சி பெலோசி பேச்சால் பரபரப்பு !

United States of America Taiwan
By Irumporai Aug 03, 2022 05:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .நான்சி பெலோசி தைவான் சென்றால் அமெரிக்கா அதற்கான விலையினை கொடுக்க வேண்டியிருக்கும் என சீனா எச்சரித்தது.

நான்சி பயணம்

பெலோசியின் பயணம் ஒரே சீனா என்ற கொள்கையை அத்துமீறிய தீவிர செயல் என கூறியுள்ள சீனா, தைவான் நாடு மீது வர்த்தக தடைகளை விதித்து உள்ளது. இந்த நிலையில் தைவான் சென்றுள்ள பெலோசி ஜனநாயகத்திற்கு ஆதரவு தருவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக கூறினார்.

தைவானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா இரும்பு கவசம் போல் நிற்கும் :  நான்சி பெலோசி பேச்சால் பரபரப்பு ! | Us Will Support Taiwans Democratic Rousing Speech

இதன்பின்பு தைவான் நாட்டு அதிபர் சைஇங்-வென்னை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அமெரிக்க சபாநாயகர் பெலோசி தைவானில் பேசும்போது வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்டது தைவான்.

சவால்களை சந்தித்தபோதிலும், அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவை கட்டியெழுப்பும் என உலகிற்கு நிரூபித்து உள்ளது என கூறியுள்ளார்.

இரும்பு கவசம் போல் அமெரிக்கா

மேலும், ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை உலகம் இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தைவான் மற்றும் உலக நாடுகளில் ஜனநாயக பாதுகாப்பு பற்றிய அமெரிக்காவின் தீர்மானம் தொடர்ந்து இரும்பு கவசம் போல் இருக்கும் என அவர் பேசியுள்ளார்.

தைவானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா இரும்பு கவசம் போல் நிற்கும் :  நான்சி பெலோசி பேச்சால் பரபரப்பு ! | Us Will Support Taiwans Democratic Rousing Speech

தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நான்சி . இதன் மூலம் ஒரே சீனா கொள்கைக்கு எதிராக மற்றும் சீனஅமெரிக்க உறவில் விரிசில் ஏற்படும் வகையில் அவரது பேச்சு , சர்வதேச அளவில் சீன அமெரிக்க உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.