ரூ.34 லட்சத்திற்கு பள்ளியை விற்க முயன்ற மாணவர்கள் - வைரலாகும் விளம்பரம்..!

United States of America
By Thahir Jun 06, 2023 10:44 AM GMT
Report

பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவர்கள் சிலர் பள்ளியை ரூ.34 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக வெளியிட்ட விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாணவர்களின் விநோத செயல் 

அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளிக்கூடத்தை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளனர்.

us students sales school for sale at rs 34 lakh

அதனை ஒருவர் ஸ்கிரிஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். அதில் இது நல்ல பகுதி நேர சிறைச்சாலை இதில் இருக்கும் 15 கழிவறைகளிலும் வடிகால் பிரச்சனை இருக்கிறது ஆனால் இங்கு நல்ல சமையல் அறை உணவருந்தும் அறை உட்பட தனியாக கூடைப்பந்து அரங்கம் இருக்கிறது.

இங்கு உங்களின் சொந்தகாரர்களான எலிகள். பூச்சிகள் உங்களை அலறவைக்கும் என கூறியுள்ளனர். மேலும் இதன் விலை 42,069 டாலர் ( இந்திய ருபாய் மதிப்பில் ரூ34 லட்சம் ) என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் இந்த செயலை பார்த்து இணையவாசிகள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.