இறந்த நபரின் தொடைக்குள் உயிருடன் நெலிந்த பாம்பு... - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!

United States of America Death
By Nandhini 1 மாதம் முன்

இறந்த நபரின் தொடைக்குள் உயிருடன் பாம்பு ஒன்று இருந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்த நபரின் தொடைக்குள் உயிருடன் இருந்த பாம்பு

அமெரிக்காவின் மேரிலாண்ட்டை சேர்ந்தவர் மருத்துவர் ஜெசிக்கா லோகன் (31). இவர் கடந்த 9 ஆண்டுகளாக பிரேத பரிசோதனை செய்யும் வேலையை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், ஜெசிக்கா தற்போது நிகழ்ந்த ஒரு கொடூரமான அனுபவத்தை பகிர்ந்துள்ள தகவல் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

ஒரு இறந்த நபரின் உடலை ஜெசிக்கா பிரேத பரிசோதனைக்காக பரிசோதனை செய்துக்கெண்டிருந்த சமயத்தில், இறந்த நபரின் தொடையில் பாம்பு ஒன்று உயிருடன் இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

us-snake-inside-dead-person

அதிர்ச்சி அடைந்த ஜெசிக்கா

அதைக் கண்டதும் ஜெசிக்கா பதறி அடித்து அறையிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு சிலர் ஓடி வந்து, அந்த பாம்பை பிடித்த பிறகே ஜெசிக்கா மீண்டும் பிரேத பரிசோதனையில் இறங்கி இருக்கிறார்.

இறந்த நபரின் உடலுக்குள் எப்படி பாம்பு உயிருடன் இருக்கும் என்று பலருக்கு சந்தேகத்தையும், குழப்பத்தையும் உருவாக்கியது. தற்போது இதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இறந்த அந்த நபரின் உடல் ஒரு ஓடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறந்த பிறகு அவரின் உடலுக்குள் பாம்பு புகுந்து இருக்கும் என்றும், உடல்கள் சூடாகவும், ஈரமாகவும் இருந்ததால் பூச்சிகள் ஊர்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஓடையில் இறந்து கிடந்த நபரின் உடலை ஜெசிக்கா பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது அவரின் அழகிய உடலின் தொடையிலிருந்து உயிரோடு பாம்பு இருந்திருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நபரின் உடலிலிருந்து பாம்பு ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.