அமெரிக்காவுக்கு ரஷ்யா பகிரங்க மிரட்டல் - என்ன சொன்னாங்க தெரியுமா?
அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து தமது அணு ஆயுதங்களை அகற்ற வேண்டும் என்று ரஷ்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது ங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 6வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு அமெரிக்கா ஆதரவு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கனடா தடை விதித்துள்ளது.
விளையாட்டு, வங்கி பரிவர்த்தனை போன்றவற்றிற்கு மேற்குலக நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா சார்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்காய் லார்வாவ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அமெரிக்கா தமது அணு ஆயுதங்களை திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.