அமெரிக்காவில் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம் - குவியும் பாராட்டு

Appointment US-Security-Adviser Indian-descent Shanti-Sethi
By Nandhini Apr 20, 2022 05:54 AM GMT
Report

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சாந்தி சேத்தி அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றியவர்.

இவர் கடந்த 2010 முதல் 2012 வரை அமெரிக்க போர் கப்பல் ஒன்றின் கமான்டராக பணியாற்றியுள்ளார். சாந்தி சேத்தி ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் முதுகலை பட்டம் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, சாந்தி சேத்திக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

அமெரிக்காவில் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம் - குவியும் பாராட்டு | Us Security Adviser Indian Descent Shanti Sethi