இந்தியாவிற்கு வருகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி - வெளியான தகவல்...!

United States of America World
By Nandhini Feb 24, 2023 09:58 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கு வரும் ஆண்டனி பிளிங்கன்

ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வரும் மார்ச் 1-ம் தேதி புதுடெல்லி வருகை தர உள்ளார்.

இந்தியா வருவதற்கு முன்பு அவர், கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார்.

இந்தியாவில் அவர் தங்கியிருக்கும் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக, மத்திய அரசு மற்றும் சிவில் சமூகத்தின் அதிகாரிகளுடன் பிளின்கன் ஒரு சந்திப்பை நடத்த இருக்கிறார்.

இந்த G20 கூட்டத்தில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, போதைப்பொருள் எதிர்ப்பு, உலக சுகாதாரம், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் பலதரப்பு மற்றும் ஆழமான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

us-secretary-state-antony-blinken-will-visit-india