Thursday, Jul 24, 2025

'நைட்ரஜன் ஹைபாக்சியா': புதிய முறையில் கொடூர மரண தண்டனை - உச்ச நீதிமன்றம் அனுமதி!

United States of America Death World
By Jiyath a year ago
Report

கொலை சம்பவம்

அமெரிக்க தென்கிழக்கு மாநிலமான அலபாமாவில் கடந்த 1988-ம் ஆண்டு எலிசபெத் சென்னட் (45) கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் கென்னத் யூஜின் ஸ்மித் மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியின் காப்பீட்டு தொகையை பெற திட்டமிட்டு, அவரது கணவர் சார்லஸ் எனபவரே மனைவியை கொல்ல சதி செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணை நடைபெறும்போதே சார்லஸ் தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து கடந்த 1996-ல் குற்றவாளிகள் இருக்கவிருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 2010-ல் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரண தண்டனை 

ஆனால் 2022ல் கென்னத்திற்கு தண்டனையை நிறைவேற்றும் விதமாக விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகள் கிடைக்காமல், முயற்சி கைவிடப்பட்டது.

இதையடுத்து "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் ஜனவரி 25-ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போன்ற ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை சுமார் 15 நிமிடங்களுக்கு செலுத்துவார்கள்.

இதனை எதிர்த்து கென்னத்தின் வழக்கறிஞர்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினர். ஆனால் இந்த மரண தண்டனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.