சி.ஏ.ஏ சட்டம்; அமெரிக்காவின் கருத்து தவறானது, தேவையற்றது - இந்தியா பதிலடி!
அமெரிக்க கருத்து
மத்திய அரசு கடந்தா சில நாட்களுக்கு முன் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் இந்த சட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறுகையில், ”இந்தியாவில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளா குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிக்கிறது. அமெரிக்கா தொடர்ந்து இந்த சட்டம் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து கண்காணித்து வருகிறது.
மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயக கோட்பாடுகள்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிக்கிறது; இந்தியாவை கண்காணித்து தான் வருகிறோம் - அமெரிக்க கருத்து!
இந்திய பதிலடி
இது குறித்து, பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ரந்திர் ஜெய்ஸ்வால், சிஏஏ சட்டத்தின் அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை அது தவறானது என்று நினைக்கிறோம். அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை தவறான தகவல்களை அடக்கியுள்ளது.
மேலும் அது தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம். சிஏஏ 2019 சட்டமானது, இந்தியாவின் உள்ளடக்கிய மரபுகள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டமானது, அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது.
2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.