வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வந்த பாதிரியார் - பொதுமக்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வந்த பாதிரியாரால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள அரிசோனா பகுதியின் தேவாலயம் ஒன்றில் ஆண்ட்ரெஸ் அராக்னோ என்பவர் பாதிரியாக இருந்து வருகிறார். இவர் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்களுக்கு ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார்.
இதனிடையே கடந்தாண்டு அவர் வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. வாட்டிகன் தேவாலயம் வகுத்த விதிகள் படி நான் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறேன் என்பதற்கு பதில் நாங்கள் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறோம் என கூறுவது தெரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் கேட்டி பர்க் தந்தை அரங்கோ தவறான வார்த்தையை பயன்படுத்தி ஞானஸ்தானத்தை வழங்கி வந்தது தனது கவனத்திற்கு வந்ததாக கூறியுள்ளார். மேலும் 1995-2021ம் ஆண்டுவரை அவர் ஞானஸ்தானம் வழங்கிய பல்லாயிரக்கணக்கானோரும் அது செல்லாது என்பதால் மீண்டும் ஞானஸ்தானம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தன் மீது ஏற்பட்ட குற்ற்ச்சாட்டை தொடர்ந்து பாதிரியார் ஆண்ட்ரெஸ் அராக்னோ தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.