அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI சோதனை : அதிர்ச்சியில் அமெரிக்கா

Joe Biden
By Irumporai Jan 22, 2023 04:45 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் வீட்டில் சோதனை

அமெரிக்க அதிபர் ஜோபைடன் வீட்டில் எப்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் ,சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI சோதனை : அதிர்ச்சியில் அமெரிக்கா | Us President Joe Bidens House Was Raided Fbi

பரபரப்பில் அமெரிக்கா

இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும். அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.