பிரதமர் மோடியை அசர வைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - வித விதமான விருந்து என்னென்ன ஐட்டங்கள் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
பிரதமர் மோடி அமெரி்க்கா பயணம்
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அமெரிக்கா சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் நடந்த இந்திய நடன கலாச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். 7.5 கேரட் தரத்திலான இந்த வைரம் முழுவதும் ஆய்வகத்தில் செய்யப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விருந்து வைத்து அசத்திய ஜோ பைடன்
இந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் இரவு விருந்து வழங்கினார். விருந்தில் சுவைமிக்க, வட மாநில மற்றும் ஐரோப்பிய புகழ்பெற்ற உணவுகள் இடம் பெற்றிருந்தன.
சில உணவு வகைகளில் அமெரிக்க, இந்திய தேசிய கொடி வண்ணமும் அலங்கரித்தன. சத்து நிறைந்த திணையிலான பல்வேறு உணவு வகைகள், சிறுதானிய கேக்குகள், தர்பூசணி மற்றும் பச்சை காய்கறிகளுடனான சாலட், வெண்ணெய் சாஸ், டாங்கி அவகொடாசாஸ், தைராபாத் புகழ்பெற்ற உணவுகளும் இடம் பெற்றிருந்தன.
காளான் மற்றும் சோளத்தினால் ஆன உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. அனைத்து உணவு வகைகளும் சைவமாகவே இருந்தன.