என்ன காரணம் சொல்லுங்க கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் : தெறித்து ஓடிய அமெரிக்க அதிபர்
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோபைடைன் செய்துள்ள செயல் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.
சரிவில் அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக வங்கிகள் கடும் பொருளாதார சரிவினை சந்தித்து வருகின்றது, குறிப்பாக அமெரிக்காவின் பிரபல வங்கியான சிலிக்கான்வேலி வங்கி திவாலானதால் அமெரிக்காவின் மற்ற வங்கிகள் கடும் சரிவினை சந்தித்து வருகின்றன.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை செய்தியாளர்கள் நேற்று சந்தித்தனர் அப்போது செய்தியாளர் ஒருவர் பைடனிடம் அமெரிக்க வங்கிகள் தொடர் சரிவில் உள்ளன , இதனால் அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்படுமா ? என கேள்வி எழுப்பினார்.
"Can you assure Americans that there won't be a ripple effect? Do you expect other banks to fail?"
— RNC Research (@RNCResearch) March 13, 2023
BIDEN: *shuts door* pic.twitter.com/CNuUhPbJAi
பதில் சொல்லாத பைடன்
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் பாதியிலே எழுந்து சென்றார், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.