இனிமே அவ்வுளவுதான் ..பகீர் கிளப்பிய ஜோபைடன் : அதிர்ச்சியில் எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது பற்றி அதிர்ச்சி தரும்படியான விமர்சனத்தை வைத்துள்ளார்.
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார், அதன் பிறகு ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை நீக்கினார்.
ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்
மேலும் உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையைனை தொடங்கியது, இதில் ட்விட்டர் இந்தியா நிறுவன ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனம் ஒரு நாளைக்கு ரூ 32 கோடியை இழந்து வருவதால் ஊழியர்களை குறைக்கும் நிலை வந்துள்ளதாகவும் இதை தவிர வேறு வழிய்ல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுவதுமாக கைபற்றிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜோபைடன் அதிர்ச்சி
அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோபைடன்:நாம் அனைவருமே தற்போது எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியது குறித்து கவலைப்படுகிறோம். உலகம் முழுவதும் பொய்களை பரப்புவதற்காகவே எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கி இருக்கிறார்.
ட்விட்டரில் இனி எடிட்டர்கள் இல்லை. அதில், ஆபத்து இருப்பதை குழந்தைகள் எப்படி புரிந்து கொள்ள முடியும்? என, அதிபர் ஜோ பைடன் சற்று காட்டமாகவே பேசி உள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ட்விட்டர் தற்போதுதான் புதிச்சாலியான கைக்கு சென்றுள்ளதாக பாராட்டிய நிலையில் தற்போது அதிபராக இருக்கும் ஜோபைடன் எலான் மஸ்க் மீதும் ட்விட்டர் மீதும் கடும் விமர்சனத்தை வைத்துள்ளது, பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் , எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத எலான் மஸ்க் இதனை எப்படி கையாள போகின்றார், ட்விட்டர் தரம் உயருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்