அமெரிக்க அதிபர் ஜோபைடன் மனைவிக்கு கொரோனா
Joe Biden
United States of America
By Irumporai
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜோ பைடன் மனைவிக்கு கொரோனா
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது.
இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் கண்காணிப்பு
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ஜோ பைடன் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உரிய சிகிச்சையை எடுத்து வருகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.