இந்தியாவில் நடக்கும் சில சம்பவங்களை உன்னிப்பா கவனிக்கிறோம் : இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா ?

india us Blinken U.S. monitoring
By Irumporai Apr 12, 2022 05:45 AM GMT
Report

இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினைகளை அமெரிக்க உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இடையே காணொலி காட்சி மூலமாக இரு தலைவர்களும் நேற்று தான் ஆலோசனை நடத்தினர், இந்த தலைவர்களின் சந்திப்பின் போது இந்தியா அமெரிக்க இடையேயான உறவு உக்ரைன் ரஷ்யா போர்குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

இதன் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதன் பிறகு செய்தியாளர்களை நான்கு பேரும் கூட்டாக சந்தித்தனர் அப்ப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், மனித உரிமை உள்ளிட்ட பொதுவான விவகாரங்களில் இந்தியாவை கவனித்து வருகிறோம்.

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் காவல்துறை மற்றும் சிறை துறை அதிகாரிகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது , அதனை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஆண்டணி பிளிங்கன் கூறிய கருத்திற்கு அவருக்கு பிறகு பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் எந்த கருத்தும் கூறவில்லை .

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க எம்பி இல்ஹான் ஓமர் இந்தியாவில் தற்போது மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது குறிப்பாக சிறு பான்மையினர் முஸ்லீம்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது, ஆனால் மோடியின் அரசினை விமர்சிக்க அமெரிக்க தயங்குகின்றது.

ஆகவே அமெரிக்கா இந்தியாவை கூட்டாளியாக இருப்பதை நிறுத்த வேண்டும் என கூரியிருந்த நிலையில் தற்போது இந்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திப்பின்போது பிளிங்கன் இது போன்ற கருத்தினை தெரிவித்துள்ளது இந்தியாவின் மீது மறைமுக அழுத்ததினை கொடுக்க உள்ளதா அமெரிக்கா ? என்ற கேள்வியினை உருவாக்கியுள்ளது.