‘‘எங்களை மன்னிச்சிடுங்க தவறுதலாக குண்டு வீசி 10 அப்பாவிகளை கொன்றுவிட்டோம்’’ மன்னிப்பு கேட்ட அமெரிக்க ராணுவம்

mistake us military 10civilians kabulkilled
By Irumporai Sep 18, 2021 05:37 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் முன்பு, தவறுதலாக குண்டு வீசி 10 அப்பாவி மக்களை கொன்றுவிட்டதாக அமெரிக்க ராணுவம், தங்கள் செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கூறியுள்ளது.

நியூயார்க்கில் நேற்று காணொலி காட்சி மூலம் பேட்டியளித்த அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜென்டரல் கென்னக் நெக்கன்ஸி கூறுகையில்:. ஆப்கானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவப்படைகள் அந்த நாட்டை தாலிபான்கள் பிடித்ததால் ஆகஸ்ட் 30ம் தேதி முற்றிலுமாக அங்கிருந்து வெளியேறியது.

ஆனால் 29ம் தேதி காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ஆளில்லா டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் மீது வீசப்பட்ட குண்டுகள் தவறுதலாக பொதுமக்கள் மீது விழுந்ததாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

இதில் 7 குழந்தைகள் உள்பட 10 பேர் மரணமடைந்துவிட்டதாகவும், இதுவொரு மிகப்பெரிய கொடூரமான தவறு என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் தாங்கள் மன்னிப்பு கேட்பதாக அமெரிக்க ராணுவ கமாண்டர் கென்னக் நெக்கன்ஸி கூறியுள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளரும் மன்னிப்பு கோரியுள்ளார்.