காபூலில் தாக்குதலை நடத்தியது அமெரிக்காவாம் வெளியான புதிய தகவல்

usa Afganistan Taliban usmilitary
By Irumporai Aug 29, 2021 03:51 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த தாக்குதல், காபூல் விமான நிலையத்திலிருந்து வடமேற்கில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎஸ்ஐ- கே  பயங்கவாதிகள் அங்கு நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர்

இந்த நிலையில், மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் ராக்கெட் மூலம் நடந்துள்ளது. காபூல் குடியிருப்பு பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளநிலையில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் பலியாகி உள்ளனர். மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது .

ஆப்கானில் மீண்டும் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்தலாம் என ஏற்கனவே பென்டகன் எச்சரித்திருந்தது .இந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்கா தான் என்றும் ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.