ஒரே இரவில் உலகின் 25வது பணக்காரரான சாமானியர் : அமெரிக்காவில் ஓர் அடடே சம்பவம்

United States of America
By Irumporai Sep 07, 2022 10:24 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 கோடீஸ்வரராக வேண்டும் என்று கனவு இருக்கும்,ஆனால் ஓவர் நைட்டில் பணக்காரரான கதையெல்லாம் உண்டு. அப்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சில மணிநேரங்களில் கோடீஸ்வரராக இருந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஒரே நைட்டில் பணக்கார்

அமெரிக்காவில் உள்ள லூசியானா பகுதியில் வசித்து வருபவர் டேரன். இவர் அரசு பணியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டேரனின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் அவரின் வங்கி கணக்கிற்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

இதனை பார்த்து அவர் சந்தோசத்தில் அதிர்ச்சி நிலைக்கு சென்றார். தனது வாழ்நாளில் இவ்வளவு பணத்தை ஒரே நாளில் பெறுவதை எண்ணி அதிர்ச்சியில் உறைந்தார். இதன்மூலம் விர்ஜின் குழுமத்தின் உரிமையாளரான ரிச்சர்ட் பிரான்சனை விட டேரன் 10 மடங்கு அதிக பணம் வைத்துள்ள நபராக மாறினார்.

ஒரே இரவில் உலகின் 25வது பணக்காரரான சாமானியர்  : அமெரிக்காவில் ஓர் அடடே சம்பவம் | Us Man Turns Billionaire For A Few Hours

அதோடு உலகில் 25வது பணக்காரர் என்ற இடத்திற்கு டேரன் சென்றார். ஆனால் அவர் அந்த பணத்தை செலவு செய்யாமல், தனது வங்கி கணக்குக்கு எப்படி இவ்வளவு டாலர் வந்தது என்பதை யோசித்தார்.   

வங்கியில் ஏதாவது தவறுதலாக டாலர் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என அவர் எண்ணினார். இதனால் அவர் வங்கியை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

பணத்தை திருப்பி வாங்கிய வாங்கி

வங்கி அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அப்போது தவறுதலாக டேரனின் வங்கி கணக்குக்கு 50 பில்லியன் டாலர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்கை 3 நாள் முடக்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வங்கி கணக்கில் இருந்த 50 பில்லியன் டாலரை திரும்ப எடுத்து கொண்டனர்.  

ஒரே இரவில் உலகின் 25வது பணக்காரரான சாமானியர்  : அமெரிக்காவில் ஓர் அடடே சம்பவம் | Us Man Turns Billionaire For A Few Hours

ஆனால் டெய்லி ஸ்டாரின் கூற்றுப்படி , டேரன் சில மணிநேரங்களுக்கு உலகின் 25 வது பணக்காரர் ஆனார். டேரனைப் போல ஒரு காலை வேளையில் உங்கள் வங்கிக் கணக்கில் பில்லியன்கள் வந்தால் என்ன செய்வீர்கள்?