ஆசையாக வளர்த்த மயில்கள்; தானே கொன்று தின்ற நபர் - ஷாக் பின்னணி!
நபர் ஒருவர் தான் வளர்த்த மயில்களைக் கொன்று, சமைத்துச் சாப்பிட்டுள்ளார்.
பகை விவகாரம்
அமெரிக்கா, புளோரிடாவைச் சேர்ந்தவர் கிரெய்க் வோக்ட் (61). இவர் மயில்களை வளர்த்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் மயில்களுக்கு உணவு அளித்து வந்துள்ளார்.
ஆனால் பகை காரணமாக இச்செயல் பிடிக்காமல் இரண்டு மயில்களைக் கொன்று சமைத்துச் சாப்பிட்டது குறித்து தனது பக்கத்து வீட்டுக்காரரின் தபால் பெட்டியில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
நபர் வெறிச்செயல்
அதில் “பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தொடர்ந்து என் மயில்களுக்கு உணவு கொடுப்பதை நிறுத்தவில்லை என்றால், தொடர்ந்து மயில்களைக் கொல்வேன். மயில்களின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொன்று, அவற்றை வறுத்துச் சமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்”
தொடர்ந்து இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின் பேரில், ஹட்சன் நகரில் வோக்ட் கைது செய்யப்பட்டார்.
பின் விசாரணையில், "நான் விடுதலை செய்யப்பட்டதும், யாரும் என் மயில்களைப் பிடித்துச் சென்றுவிடாதபடி, என்னிடம் மீதமுள்ள எல்லா மயில்களையும் கொன்றுவிடுவேன்" என்று கூறியுள்ளார்.