சிறையில் கைதியை உயிரோடு தின்ற மூட்டைப்பூச்சிகள் - பகீர் விவகாரம்
மூட்டைப்பூச்சிகள் கைதி ஒருவரை உயிரோடு தின்றதால் இறந்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறை கைதி
அமெரிக்காவைச் சேர்ந்தவர் லாஷான் தாம்சன்(35). 2022ல் அட்லான்டாவில் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டார். பின் ஃபுல்டன் கவுன்ட்டி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக உறுதியானதால் மனநலப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், திடீரென சிறை அறையில் நினைவிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தாம்சனின் வழக்கறிஞர், ``மூட்டைப்பூச்சிகள் அவரை உயிருடன் தின்றதால்தான், அவர் இறந்துவிட்டார்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதிர்ச்சி சம்பவம்
அதோடு அவருடைய குடும்பத்தினர் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்தச் சிறையை மூடிவிட்டு, தரமானதாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக ஃபுல்டன் கவுன்ட்டி ஷெரஃப் அலுவலகம் அளித்த அறிக்கையில், ``தாம்சனின் மரணம் குறித்து முழு விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. மூட்டைப்பூச்சிகள், பேன்கள்,
பிற பூச்சிகளின் தொல்லைகளைத் தீர்க்க 5,00,000 டாலர் பயன்படுத்தி சிறையை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்புச் சுற்றுகளுக்கான நெறிமுறைகளைப் புதுப்பித்தல் உட்பட சிறையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்” என தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை IBC Tamil