வரலாற்றில் முதல்முறையாக... அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜோ பைடனின் பேத்திக்கு திருமணம்...!

Joe Biden United States of America Marriage
By Nandhini Nov 15, 2022 07:14 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனின் பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது. 

அதிபர் ஜோ பைடனின் பேத்திக்கு திருமணம்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நோமி (28)க்கு வரும் சனிக்கிழமை வெள்ளை மாளிகையில் திருமணம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுவரை வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர்களின் மகன், மகள்களுக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ள நிலையில், முதல்முறையாக அதிபரின் பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இதுவரை வெள்ளை மாளிகையில் 18 ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளது. அடுத்ததாக ஜனாதிபதி ஜோ பிடனின் பேத்தி நோமி பிடன் மற்றும் அவரது வருங்கால கணவர் பீட்டர் நீல் ஆகியோர் நவம்பர் 19ம் தேதி தெற்கு திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.