சும்மா வானத்துல பறக்குறவங்க எல்லாம் விண்வெளி வீரர்களா? கொதித்தெழுந்த அமெரிக்கா!

Jeff Bezos usa astronaut space tourism
By Irumporai Jul 25, 2021 09:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பொழுதுபோக்குக்காக விண்வெளிக்குச் செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது எனஅமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க கோடீஸ்வரர்களான ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வெற்றிகரமாக திரும்பினர்.

மேலும் விண்வெளி சுற்றுலாவுக்கு இவர்களது நிறுவனம் தயாராகி வரும்நிலையில் விண்வெளியினை சுற்றி பார்க்க செல்லும் கோடீஸ்வரர்களை விண்வெளி வீரர்கள் என ஏற்றுக்கொள்ள முடியாது என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கபட்டு வந்தது.

இந்த நிலையில் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பானது பொழுதுபோக்குக்காக விண்வெளிக்கு செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பெடரல் ஏவியேஷன் கருத்தின்படி:

கோடீஸ்வரர்கள் சுற்றி பார்க்க விண்வெளிக்கு சென்றாலும் அவர்கள் சுற்றுலா பயணிகள்தான்.

அவர்களால் விண்வெளி வீரர்கள் ஆக முடியாது. இவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைப்பதன் மூலமாக எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களின் அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடும்.

ஆகவே ஜெஃப் பெசோஸ், ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட தொழிலதிபர்கள்தான் ஆனால் விண்வெளி வீரர்கள் என்று அழைக்கக்கூடாது என்று அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வானம் யாருக்கான சொத்து கிடையாது,  அதே சம்யம் விண்வெளி ஆய்வு பயணம் வேறு விண்வெளி சாகச பயணம் என்பது வேறு என்பதை தெளிவுபடுத்தியுள்ளதுபெடரல் ஏவியேஷன் .