ஒரே நாளில் 1,000 கோல்டு கார்டுகள் விற்பனை; அமெரிக்காவின் கோல்டு கார்டு திட்டம்.. முக்கிய அம்சங்கள் என்ன?
அமெரிக்காவின் கோல்டு கார்டு திட்டம் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அமெரிக்கா
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிப்பேன் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது.
கோல்டு கார்டு
இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சுழலில் அமெரிக்காவின் கோல்டு கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு கார்டுக்கு $5 மில்லியன் செலுத்தி அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை மற்றும் விருப்ப குடியுரிமையை பெற முடியும். இந்த கோல்டு கார்டை பெறுவதற்காக மக்கள் வரிசையில் நிற்பதால், ஒரே நாளில் 1,000 கோல்டு கார்டுகள் விற்கப்பட்டதாக அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.