ஹிந்து மத வெறுப்பை பரப்பினால் தண்டனை - அமெரிக்காவில் முதன்முறையாக வர உள்ள சட்டம்

United States of America Hinduism
By Karthikraja Apr 13, 2025 01:03 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 ஹிந்து மத வெறுப்பை குற்றமாக கருதும் மசோதாவை ஜார்ஜியா அறிமுகப்படுத்தியுள்ளது.

மத வெறுப்புக்கு எதிராக சட்டம்

உலகின் பெரும்பாலான நாடுகளில் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளித்தாலும், மதம் குறித்து விமர்சிப்பது குற்றமாக பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாம் மதம் குறித்தோ, நபிகள் நாயகம், குரான் குறித்து விமர்சித்தால், அதை குற்றமாக கருதி, மரண தண்டனை விதிக்குமளவிற்கு சட்டத்தில் இடமுண்டு.  

georgia hinduphobia

தற்போது அமெரிக்காவில் முதன்முறையாக ஜார்ஜியா மாகாணம், ஹிந்து மதம் குறித்து தவறாக பேசுவதை குற்றமாக கருதும் மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

முதல் மாகாணம் ஜார்ஜியா

மதம், இனம், நிறம், தேசிய வம்சாவளியை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் இந்து வெறுப்பைச் சேர்க்க முன்வந்துள்ளது. 

georgia hinduphobia bill

இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், வெறுப்பு குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான தற்போதைய சட்டங்களின் கீழ் ஹிந்து மத வெறுப்பை மேற்கொள்வோருக்கு தண்டனை கிடைக்க வழி வகுக்கும். 

ஜார்ஜியா மாகாணம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மசோதாவை, ஹிந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன.

அமெரிக்காவில் 25 லட்சத்திற்கு அதிகமான ஹிந்துக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 0.9% ஆகும். இதில் ஜார்ஜியாவில் மட்டும் 40,000 க்கும் அதிகமான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர்.