2022 ஆம் ஆண்டின் முதல் மரண தண்டனை இதுதான் - அமெரிக்காவில் நடந்தது என்ன?

USFirstExecution USFirstExecution2022
By Petchi Avudaiappan Jan 29, 2022 05:29 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அமெரிக்கா
Report

அமெரிக்காவில் ஹோட்டலில் கொள்ளையடித்து இருவரை கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த டொனால்டு கிராண்ட் என்பவர் கடந்த 2001 ஆம் ஆண்டு தன் 25 வது வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களை கொலை செய்து கொள்ளையடித்தார்.

அவர்  ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததுடன், மற்றொருவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட டொனால்டிடம் விசாரணை நடத்திய போது ஜெயிலில் இருந்து அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் முதல் மரண தண்டனை இதுதான் - அமெரிக்காவில் நடந்தது என்ன? | Us First Execution 2022

இதனிடையே விசாரணையின் முடிவில் அவருக்கு நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில்,  அதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காததால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் டொனால்டு கிராண்டின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது. மேலும் அங்கு பல்வேறு மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒக்லஹோமாவும் ஒன்று என்ற நிலையில் அங்கு அந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது.  இந்த நிலையில் டொனால்டு கிராண்டிற்கு மூன்று விஷ ஊசிகள் செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அங்கு 2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.