நடுவானில் பறந்த விமானத்தில் தீ விபத்து - 4 விமான பணியாளர்கள் காயம்..!
அமெரிக்காவில் நடுவானில் பறந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்தில் 4 விமான பணியாளர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் தீ விபத்து
நேற்று அமெரிக்காவில் நெவார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பயணி ஒருவரின் மடிக்கணினியில் தீ விபத்து ஏற்பட்டது. மடிக்கணினியிலிருந்து பரவிய தீயை பளபளவென பரவியது.
இந்த தீயை அணைக்க முயற்சி செய்த 4 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர். விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, விமானம் அவசர, அவசரமாக மீண்டும் சான் டியாகோ விமான நிலையத்திற்கு திரும்ப நேரிட்டது. இதனையடுத்து, விமானம் சான் டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமானப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
