உத்தரவு போட்ட ஜோபைடன் .. குண்டுமழை பொழிந்த அமெரிக்க விமானங்கள்.. காரணம் என்ன?
ஈராக் எல்லையில் இருக்கும் அமெரிக்க இராணுவப் படையினர் மீது ஈரான் பயங்கரவாத அமைப்புகள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக் சிரியா எல்லைபகுதியில் இருக்கும் பயங்கரவாதிகளின் பகுதிகளில் அமெரிக்க இராணுவப்படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியதால் மீண்டும் அமெரிக்கா ஈரான் இடையே பரபரப்பு நிலவியுள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோபைடன் ஆட்சிஅமைத்ததால் அமெரிக்கா சீனா இடையில் சமாதான கொடி பறந்தாலும் கொரோனா விவகாரங்களில் கருத்து மோதல்கள் இருந்த வண்ணமே உள்ளது.
அதேபோல் தான் ஈரான் விவகாரமும். ஆரம்பகாலம் முதலே, அமெரிக்கா - ஈரான் இடையே பகை நீடித்து வருகிறது .
கடந்த ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில்தற்போது ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின்பு ஈரான் இடையிலான அணு ஆயுதக் கொள்கைகளில் அமைதியான போக்கு ஏற்படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இருநாட்டினருக்கும் இடையில் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவப்படையினர் மீது ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் பயங்கரவாத அமைப்புகளின் மீது தாக்குதல் நடத்த பென்டகனுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
ஆகவே நேற்று ஈராக் - சிரியா எல்லையில் இருக்கும் பயங்கரவாதிகளின் ஆயுதக் கூடங்களிலும், முகாம்களிலும் அமெரிக்க இராணுவப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
ஈராக் - சிரியா எல்லைப்பகுதிகளில் பதுங்கியிருந்த ஈரான் பயங்கரவாத அமைப்புகளைச் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பெண்டகன் தரப்பு தெரிவிக்கிறது
ஆனால், இந்த தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பென்டகனின் செய்தித்தொடர்பாளரான ஜான் கிர்பி, அமெரிக்க இராணுவத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதால், ஈரானிடமிருந்து தற்காத்துகொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இந்த தாக்குதல் என கூறினார்..
மேலும், ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பிறகு இது ஈரான் மீது நடத்தப்படும் இரண்டாம் கட்ட தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.