இந்தியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட் - அதிக விசா வழங்க முடிவு செய்த அமெரிக்கா
இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக விசா வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு துாதரகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிரடி முடிவு
அமெரிக்கா, படிப்பு, சுற்றுலா, வணிகம் என பல வகையான விசா வழங்கப்படுகிறது. இதில் இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசா வழங்க அமெரிக்கா துாதரகம் ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் கூடுதல் அதிகாரிகளை நியமதித்தும், சனிகிழமைகளில் துாதரக அலுவலகங்களை திறந்தும் விசா ஒப்புதல் நடைமுறையை துரிதப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
8 லட்சம் விசா வழங்க முடிவு
இதுகுறித்து மும்பையில் உள்ள அமெரிக்க துாதரகத் தலைவர் ஜான் பல்லார்ட் கூறுகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த ஆண்டில் 8 லட்சம் விசாவுக்கு ஒப்புதல்அளித்தது.
இவற்றில் கல்விக்கானவிசா மட்டும் 1.25 லட்சம் ஆகும்.இந்த ஆண்டில் இன்னும் அதிக விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கதிட்டமிட்டுள்ளோம்.
அதேபோல்,முதல் முறையாக பி1, பி2 சுற்றுலாமற்றும் தொழில்முறை பயணவிசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு காத்திருப்புக் காலம்குறைக்கப்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவில்2.5 லட்சம் பி1 மற்றும் பி2 விசாக்களை வெளியிட்டுள்ளோம். விசாபுதுப்பிக்க இனி மக்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பம் அனுப்பலாம்.
அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கான நடை முறையை எளிமைப்படுத்தும் நோக்கில் விசா காத்திருப்புக் காலத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.