பெண்ணை முத்தமிட்ட போலீஸ் அதிகாரி; காருக்குள் 40 நிமிடம் - இறுதியில் நேர்ந்த சோகம்!
பொது இடத்தில் பெண்ணுடன் தகாத செயலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் அதிகாரி
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் பிரான்சிஸ்கோ மார்லெட் என்ற காவல்துறை அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த அதிகாரி போலீஸ் வாகனம் அருகில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்தார்.
அதன் பின் அதிகாரி அந்த பெண்ணின் தோளில் கைபோட்டு, அழைத்து சென்று போலீஸ் காரின் கதவை திறந்து இருவரும் உள்ளே சென்று கதவை மூடியுள்ளனர். பொது இடத்தில் போலீஸ் அதிகாரி செய்த இந்த செயலை அங்கு உள்ள ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
சஸ்பெண்ட்
இந்த வீடியோ டிக்டாக உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே இது போன்று நடந்து கொண்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து பிரான்சிஸ்கோ மார்லெட் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து வீடியோவாக பதிவு செய்த நபர் கூறுகையில் 'சுமார் 40 நிமிடங்கள் போலீஸ் அதிகாரியும், அந்த பெண்ணும் காரினுள் இருந்ததாக கூறியுள்ளார்.