மாறும் கால நிலை ... உறைய வைக்கும் பனிப்பொழிவு : கலையிழந்த கிறிஸ்துமஸ்
கால நிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பருவ நிலை மாறி வருகின்றதும் அந்த வகையில் அமெரிக்கா முழுவதும் தற்போது கடும் குளிரானது நிலவி வருகின்றது.
இந்த மாத தொடக்கத்திலிருந்தே கடும் குளிர் நிலவி வருவதன் காரணமாகவும் அதிக பனிப் பொழிவு காரணமாகவும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது பாம்போஜெனிசிஸ் எனப்படும் வெடிகுண்டு சுறாவளி உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் கடும் பனி
இதனால் அமெரிக்காவின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 45டிகிரி வரை சென்றுள்ளது , பனிப்புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன குறிப்பாகா,அமெரிக்காவின் முக்கிய விடுமுறை தினமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலையிழந்துள்ளது , இந்த கடுமையான பனிப்புயல் ஆண்டின் மிக முக்கிய விடுமுறை தினமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது.
கலையிழந்த கிறிஸ்துமஸ்
ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல லட்சம் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக அமெரிக்கா முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.