“கனடாவுக்கு போகாதீங்க” - நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

covid19 america canada
By Petchi Avudaiappan Jan 11, 2022 11:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அமெரிக்கா
Report

கொரோனா பரவல் காரணமாக கனடாவுக்கு செல்ல வேண்டாம் என தங்கள் நாட்டு மக்களை அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிதீவிரமாக உள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டுக்கு அமெரிக்கர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த சில காலமாகவே அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக கனடா மாறி வருவதால் ஆண்டுக்கு பலர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதனிடையே அமெரிக்க அரசின் இந்த உத்தரவு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

அதேசமயம் பெரும்பாலான தொற்று நோய்களால் இருநாடுகளுக்கும் இடையேயான எல்லை அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்கும் மூடப்படுவது வழக்கமாகி வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற 80 இடங்களை அமெரிக்கா கண்டறிந்து நான்காம் நிலை பட்டியலில் வைத்திருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.