பர்கர் சாப்பிட்ட சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : வெளியான அதிர்ச்சி தகவல்

United States of America Viral Photos Crime
By Irumporai Oct 09, 2022 03:00 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவில் பர்கர் சாப்பிட்ட சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தபட்ட சமபவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. ஆனால் காவலர் ஒருவரே சிறுவனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பர்கர்சாப்பிட்ட சிறுவன் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த போலீஸ்காரர் தான் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார், சிறுவன் காரில் அமர்ந்த ஹாம்பர்கர் சாப்பிட்டபோது இந்த கொடூரச் செயலில் போலீஸ்காரர் ஈடுபட்டார்

பாதிக்கப்பட்ட சிறுவன் பெயர் எரிக் கன்டு. இவர் கடந்த அக்டோபர் 2ஆம் தேதியன்று சான் அன்டோனியோ போலீஸ்காரர் ஜேம்ஸ் பெர்ன்னாண்ட் தான் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார். முதலில் அந்த போலீஸார் சிறுவன் காரில் தப்பிச் செல்ல முயன்றார்.

அவரை என்னை தாக்கியதால் அவரை சுட வேண்டியதாயிற்று என்று கூறியிருந்தார். ஆனால் அந்த போலீஸ்காரர் தன் உடலில் பொருத்தியிருந்த பாடி கேம் காட்சிகளை ஆய்வு செய்தபோது உண்மை தெரிய வந்தது.

நடந்தது என்ன?

அதில், துரித உணவகத்தின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் 17 வயதான எரிக் அவரது பெண் தோழியுடன் அமர்ந்து பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது பெண் தோழி பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் எரிக்கிடம் விசாரணை செய்தார்.

பர்கர் சாப்பிட்ட சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : வெளியான அதிர்ச்சி தகவல் | Us Boy Eating Burger Multiple Times Policeman Shot

காரில் இருந்து வெளியே வருமாறு நிர்பந்தித்தார். சிறுவன் எரிக் பர்கர் தானே சாப்பிடுகிறேன் என்னை ஏன் இறங்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டார். அவ்வளவு தான் அந்தச் சிறுவனை நோக்கி காவலர் சுட ஆரம்பித்தார்.

17 முறை துப்பாக்கி சூடு

சுதாரித்துக் கொண்ட சிறுவன் ரிவர்ஸ் எடுத்துவிட்டு காரை வேகமாக செலுத்தினார். ஆனால் அதற்குள் சிறுவனை நோக்கி 17 முறை அந்தக் காவலர் சுட்டிருந்தார்.

இதில் சிறுவன் காயமடைந்தார், பின் இருக்கையில் இருந்த அவரது தோழி காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி பெர்னாண்ட் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.