டிரம்புக்கு கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசு! எழுந்தது சர்ச்சை

Belgium
By Fathima Aug 14, 2026 06:32 AM GMT
Report

Belgium Diamond Ring to Trump: பெல்ஜியம் நாட்டை சேர்ந்த Antwerp World Diamond Centre - AWDC மற்றும் நகை வடிவமைப்பாளர் டேவிட் காட்லிப் ஆகியோரால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு வழங்கப்பட்ட மிக விலை உயர்ந்த மோதிரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் 321 வைரங்கள், மரகதம், மாணிக்க கற்கள் மற்றும் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட சுமார் 25,000 முதல் 35,000 டொலர் மதிப்பு கொண்ட மோதிரம் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு பரிசாக வழங்கப்பட்டது.

டிரம்புக்கு கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசு! எழுந்தது சர்ச்சை | Us Belgium Diamond Ring To Trump

இது கொடுக்கப்பட்ட சில வாரங்களில் ஐரோப்பிய இயற்கை வைரங்களை இறக்குமதி செய்வதற்கான முழு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.

வரிவிலக்கு பெறுவதற்கான லஞ்சமா என அமெரிக்கா ஜனநாயக கட்சி செனட்டர்கள் எலிசபெத் வாரன் மற்றும் ரிச்சர்ட் புளூமெந்தால் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் இதுகுறித்து விளக்கமளித்துள்ள AWDC, சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்றும் வரி விலக்கு பற்றிய பேச்சுவார்த்தைக்கும் இதற்கு எந்தவித சம்மந்தமும் கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.