காப்புரிமை மீறல் - ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட் வாட்ச்கள் விற்க தடை!
ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அமெரிக்காவில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காப்புரிமை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு ஆப்பிள் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கும், பிரபல மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோவுக்கும் இடையே காப்புரிமை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
விற்க தடை
இதனால் சர்வதேச வர்த்தக ஆணையத்தில் மசிமோ நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதில் மசிமோ நிறுவனத்தின் காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இதனால் ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அமெரிக்காவில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள சில்லறை விற்பனையாளர்களின் கையிருப்பில் உள்ள கடிகாரங்களை விற்பனை செய்யலாம்.
மேலும், அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை என சர்வதேச வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.