ரஷ்யாவுடன் சமாதானம் பேசிய மோடி .. அமெரிக்கா பராட்டு

By Irumporai Sep 21, 2022 09:56 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கடந்த வாரம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

மோடி புதின் சந்திப்பு

அப்போது ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி , உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்ட்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் இது போருக்கான நேரம் இதுவல்ல எனபதையும் வலியுறுத்தினார். இதற்கு விளக்கம் கொடுத்த ரஷ்ய அதிபர் புதின் போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 

 அமெரிக்கா பாராட்டு 

உலகமே கவனித்து வரும் ஐநா சபையின் பேச்சினை கேட்காத புதின், பிரதமர் மோடியின் போர் சமதானம் குறித்த பேச்சுக்கு பதில் கூறியதும் பிரதமர் மோடியின் செயலுக்கும் சரவ்தேச ஊடகங்கள் பாராட்டி எழுதின.

ரஷ்யாவுடன் சமாதானம் பேசிய மோடி .. அமெரிக்கா பராட்டு | Us Appreciates Pm Modis Talk Russian Presiden

இந்த நிலையில் ரஷ்ய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், நீண்ட காலமாக ரஷ்யாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புதினிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.