அந்த அதிபரின் தலைக்கு ரூ.483 கோடி பரிசு - அமெரிக்கா ஏன் இப்படி துடிக்கிறது?
வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.483 கோடி பரிசு
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது பல கூட்டாளிகள் முதன்முதலில் 2020 இல் டிரம்பின் ஆரம்ப பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்குள் கோகோயின் கடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
2024 ஆம் ஆண்டு அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், அமெரிக்காவின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அமெரிக்கா அறிவிப்பு
இந்நிலையில் அமெரிக்க நீதித்துறை ஏற்கனவே நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய $700 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது. மேலும் 7 மில்லியன் டன் பறிமுதல் செய்யப்பட்ட கோகோயின் நேரடியாக அவரிடம் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நிக்கோலஸ் மடூரோவை கைது செய்ய தகவல் அளிப்போருக்கு 50 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.438 கோடி சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னதாக $1.5 கோடி வெகுமதி அறிவித்திருந்தது.
இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் பாம் பொண்டி கூறுகையில், "அதிபர் டிரம்ப்பின் கீழ், மடூரோ நீதித் துறையிலிருந்து தப்ப முடியாது. அவரது குற்றங்களுக்காக அவர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்," என தெரிவித்துள்ளார்.