வானில் பறந்த விமானத்திலிருந்து கீழே விழுந்த ஆப்கான் மக்கள் - பதைபதைக்கும் காட்சிகள்
வானில் பறந்த அமெரிக்கா ராணுவ விமானத்திலிருந்து ஆப்கான் மக்கள் கீழே விழுந்த பதைபதைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் அனைத்து நகரங்களையும் கைப்பற்றிய பிறகு, தலைநகரான காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் ஒட்டு மொத்த நாடும் அவர்களின் ஆட்சிக்கு கீழ் வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் அனைத்து நகரங்களையும் கைப்பற்றிய பிறகு, தலைநகரான காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் ஒட்டு மொத்த நாடும் அவர்களின் ஆட்சிக்கு கீழ் வந்துள்ளது.
இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரம் தாலிபான்கள் கையில் சென்றுவிட்டது.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் மட்டுமின்றி அங்கு தங்கியுள்ள வெளிநாட்டு மக்களும் அந்நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர்.இதனால் காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்தனர்.

அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கபட்டிருந்த விமானங்களில் முண்டியடித்து ஏற முயன்றனர்.இதனையடுத்து அங்கு வந்த தாலிபான் அமைப்பினர் கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தாலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.மேலும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்கா ராணுவ விமானத்தையும் விட்டு வைக்காத அம்மக்கள் ஓடு பாதையில் சென்ற அந்த விமானத்தை பின் தொடர்ந்து அதில் ஏறினர்.விமானத்தில் முன்பக்க டயர்களையும் மக்கள் விட்டு வைக்கவில்லை.

இதை சற்றும் கண்டு கொள்ள அமெரிக்கா ராணுவ விமான வானில் பறக்க தொடங்கியது.இதனால் விமானத்தில் வெளிபுறத்தில் தொங்கியபடி பறந்த மக்கள் வானில் சென்ற விமானத்தில் இருந்து கீழே விழுந்தனர்.அவர்கள் வானில் இருந்து விழும் காட்சிகள் தற்போது சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.
Desperate Afghans trying to flee the Taliban hanging on to US military plane to get out of Kabul and fall to their deaths. Low flying US Apache helicopters chasing Afghan civilians off the runway with their rotor blades. But Julian Assange is the criminal? pic.twitter.com/RPT1o48MqL
— Kim Dotcom (@KimDotcom) August 16, 2021