சாகச நிகழ்ச்சியில் சிதறிய போர் விமானங்கள்- 6 பேர் பலி என தகவல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நகரில் விமான படை சார்பில் 2ம் உலக போர் காலத்தில் பயன்படுத்தபட்ட விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விமான நிகழ்ச்சி
இதில் பங்கேற்ற , பெரிய ரக போயிங் பி -17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி- 63 என்ற விமானமும் விண்ணில் பறந்தன் அப்போது இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து சென்றபோது , நடுவானில் தீடீரென மோதி விபத்தில் சிக்கியது.
OMG - two planes collided at ‘Wings Over Dallas’ air show today
— James T. Yoder (@JamesYoder) November 12, 2022
This is crazy
pic.twitter.com/CNRCCnIXF0
சிதறிய விமானங்கள்
அப்போது முன்னோக்கி சென்ற போயிங் விமானத்தின் மீது அதன் இடதுபுறத்தில் சென்ற சிறிய விமானம் மோதி உள்ளது. இரண்டு விமானங்களும் விபத்தில் துண்டுகளாக உடைந்து சிதறின.

தொடர்ந்து தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்வையாளர்களாக இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து உள்ளனர். விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் போயிங் ரக விமானத்தில் 5 பேர் மற்றும் சிறிய விமானத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேர் பயணித்து உள்ளனர் என கூறப்படும் நிலையில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.