அவரால் தான் குடிக்கு அடிமையானேன்...40 வயதில் இரண்டாவது திருமணம் ஏன்..? ஊர்வசி ஓபன் டாக்

Tamil Cinema Tamil Actress
By Karthick Aug 28, 2023 02:30 PM GMT
Report

பிரபல தென்னிந்திய நடிகை ஊர்வசி, தான் ஏன் 40 வயதில் திருமணம் செய்து கொண்டேன் என்ற காரணத்தை அண்மை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஊர்வசி  

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் மாபெரும் இடத்தை பெரும் வரிசையில் நிச்சயமாக ஊர்வசிக்கு தனி இடம் உண்டு. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் எண்ணற்ற படங்களில் நாயகியாக நடித்து வந்த ஊர்வசி, தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

urvasi-about-her-2nd-marriage

காமெடி, எமோஷனல் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் நடிகை ஊர்வசி தற்போது, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதனால் தான் இரண்டாவது திருமணம் 

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ள ஊர்வசி, தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிவதற்கு குடிப்பழக்கம் தான் காரணம் என்று கூறி, தனக்கு மதுவை அறிமுகப்படுத்தியது மட்டுமின்றி தன்னை குடிக்கு அவரே குடிக்கு அடிமையாக்கினார் என அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.

urvasi-about-her-2nd-marriage

மேலும், அந்த நேரங்களில் தான் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறிய ஊர்வசி, அப்போது தன் குடும்ப நண்பரான சிவபிரசாத் என்பரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டார். தான் இரண்டாவது திருமணம் செய்யும் போது தன்னுடைய வயது 40 என குறிப்பிட்ட அவர், அதனை பலரும் விமர்சித்தார்கள் என்று கூறி, ஆனால் இதையெல்லாம் தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று ஊர்வசி கூறியுள்ளார்.