ரிஷப் பண்டை காண பதறியடித்து வந்த முன்னாள் காதலி - வைரலாகும் ஃபோட்டோ

By Sumathi Jan 06, 2023 05:38 AM GMT
Report

ரிஷப் பண்டை காண பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா அங்கு வந்ததாக தகவல்கள் பரவுகின்றன.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் சமீபத்தில் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பும்போது ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்தார்.

[

டேராடூனில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட், அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஊர்வசி ரவுத்தேலா

அந்த வகையில், ரிஷப் பண்ட் உடன் கருத்து முரண்பாட்டில் இருப்பதாக கூறப்படும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, மும்பை மருத்துவமனைக்குச் சென்று பண்டை நேரில் சந்தித்ததாக தற்போது செய்திகள் பரவி வருகின்றன.

மேலும், ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் மும்பை கோகிலாபென் மருத்துவமனையின் புகைப்படத்தை ஊர்வசி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வெளியிட்டார்.