மேட்ச் பார்க்கச் சென்ற பிரபல நடிகை; மைதானத்தில் நேர்ந்த சோகம் - வைரல் பதிவு!
மேட்ச் பார்க்க சென்ற நடிகை ஊர்வசி ரவுத்தாலாவின் ஃபோன் காணாமல் சென்றுள்ளது.
நடிகை ஊர்வசி ரவுத்தாலா
தமிழில் ‘லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரவுத்தாலா. இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன்,
இந்தியாவின் 3வது லீக் போட்டி கடந்த 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்ட நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நேர்ந்த சோகம்
இதனைக் காண பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். அதில், ஊர்வசி ரவுத்தாலாவும் கலந்துக் கொண்டு போட்டியை கண்டு களித்தார்.
அதனைத் தொடர்ந்து, தனது 24 காரட் தங்க ஐ போனை தொலைத்து விட்டதாக அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,
? Lost my 24 carat real gold i phone at Narendra Modi Stadium, Ahmedabad! ?️ If anyone comes across it, please help. Contact me ASAP! ? #LostPhone #AhmedabadStadium #HelpNeeded #indvspak@modistadium @ahmedabadpolice
— URVASHI RAUTELA?? (@UrvashiRautela) October 15, 2023
Tag someone who can help pic.twitter.com/2OsrSwBuba
"நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் எனது ஒரிஜினலான 24 கேரட் தங்கத்திலான ஐஃபோன் தொலைந்துவிட்டது. யாரேனும் வைத்திருந்தால் முடிந்த அளவு விரைவாக என்னை தொடர்புகொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.