டெல்லி மகளிருக்கு மாதம் ரூ.2,500: 'டெல்லி லட்சுமி' திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Tamil nadu Delhi India
By Vinoja Jul 31, 2026 02:34 PM GMT
Report

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 'டெல்லி லட்சுமி' திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லி மகளிருக்கு மாதம் ரூ.2,500:

அமைச்சரவை ஒப்புதல்

இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட, 21 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் பயன்பெற உள்ளனர். உதவித்தொகை வழங்கும் முறையில் இரண்டு விருப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் முறையில் ரூ.1,000 டிஜிட்டல் ரூபாய் வாலெட்டில் செலுத்தப்பட்டு, மீதமுள்ள தொகை மாதந்தோறும் தொடர் வைப்புத்தொகை  அல்லது நிலையான வைப்புத்தொகை  கணக்கில் செலுத்தப்படும்.

இரண்டாவது முறையில், முழு உதவித்தொகையும் தொடர் அல்லது நிலையான வைப்புத்தொகையாக செலுத்தப்படும். பயனாளர்கள் தங்களுக்கு ஏற்ற விருப்பத்தைத் தேர்வு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.