நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 26ம் தேதி துவங்கியது. முதல் நாளில், 19 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இரண்டாம் நாளான 29ம் தேதி, 80 பேர் மனு தாக்கல் செய்தனர். 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால், மனு தாக்கல் நடக்கவில்லை.
தொடர்ந்து, 31ம் தேதி மனுக்கள் பெறப்பட்டன. அன்றைய தினம், ஆயிரத்து 369 பேர் மனு தாக்கல் செய்தனர். ஐந்து நாட்களில் மொத்தமாக, 10 ஆயிரத்து, 153 மனுக்கள் பெறப்பட்டன.
ஆறாம் நாளான நேற்று மனுக்கள் வழங்க, அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெறுவதற்கு, 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.