நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

Tamilnadu Urban local elections Final phase candidate list
By Thahir Feb 07, 2022 02:06 AM GMT
Report

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு, வரும் 19ம் தேதி நகர்ப்புற தேர்தல் நடக்க உள்ளது.

வெற்றி பெறும் கவுன்சிலர்கள் இணைந்து, மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்கின்றனர்.

இத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஜனவரி 28ந்தேதி துவங்கி 4ம் தேதி முடிவடைந்தது.

மனுக்களை திரும்ப பெற இன்று மாலை 5:00 மணி வரை அவகாசம் உள்ளது.

இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல், இன்று இரவு மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.