இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மறுவாக்குப்பதிவு

Tamilnadu Start UrbanLocalElection Revoting
By Thahir Feb 21, 2022 02:06 AM GMT
Report

தமிழகத்தில் இன்று 7 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் 61 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கபட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனிடையே தமிழகத்தில் 5 வார்டுகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 51, வார்டு எண் 179, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16, திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25 ஆகிய 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரமான 5 மணி முதல் 6 மணிவரை கோவிட் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.