நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெற்றது

tnelectioncampaignends urbanlocalelections tamilnaduelections2022
By Swetha Subash Feb 17, 2022 02:30 PM GMT
Report

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெற்றது | Urban Local Election Campaigns Ends In Tamilnadu

தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும்,

வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெற்றது | Urban Local Election Campaigns Ends In Tamilnadu

மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் நடைபெறும் வார்டுகளுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.