இங்கு மட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் ’யுரேனியம்’ - எப்படி?
தாய்மார்களின் தாய்ப்பாலில் ’யுரேனியம்’ இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுரேனியம்
பிகார் மாநிலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மருத்துவர் அருண் குமார் மற்றும் பேராசிரியர் அசோக் கோஷ் தலைமையிலான பாட்னாவின் மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை குழு மற்றும்

மருத்துவர் அசோக் சர்மா தலைமையிலான டெல்லி எய்ம்ஸ் குழு இணைந்து அண்மையில் தாய்ப்பால் குறித்த ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில், போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, கதிஹார் மற்றும் நாலந்தா ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 முதல் 35 வயதுடைய 40 தாய்மார்களின் தாய்ப்பால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
என்ன காரணம்?
அதன்படி, சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் ‘யுரேனியம்’ தனிமம் கண்டறியப்பட்டத ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பிகாரில் உள்ள 70 சதவீத குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் உடலில் யுரேனியம் கலப்பதால், சிறுநீரக வளர்ச்சி மற்றும் நரம்பு வளர்ச்சி குறைபாடு, அறிவாற்றல் பிரச்னை ஏற்படக் கூடும் என்கின்றனர். தாய்ப்பாலில் யுரேனியம் கலப்பதற்கு காரணம், குடிநீரில் கலந்திருக்கும் யுரேனியம் அளவு அதிகப்பட்சமாக 82 மைக்ரோகிராம்.
மக்கள் அதிகளவில் நிலத்தடி நீரை பயன்படுத்துவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆறுகளில் கலப்பது, அதிகளவில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஆகியவை தான்..