இப்படி செய்தால் விளங்கமாட்டான் : உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் துரைமுருகன்
கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
அமைச்சர் துரைமுருகன்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் முகஸ்துதி செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன் சட்டமன்ற உறுப்பினர்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று நினைக்கிறன். உங்களுக்கு உங்கள் தொகுதி குறைகளை, வேண்டுகோளை கூற உங்களுக்கு அளிக்கப்படும் நேரத்தில் பாதிநேரம் வர்ணையில் சென்றுவிடுகிறது என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், சிதம்பரத்தில் ஓர் மாநாடு, அங்கு ஆலடி அருணா பேசுகையில் அண்ணாவை புகழ்ந்து பேசுகிறார். உடனே, அண்ணா அழைத்து கண்டித்தார். என்னை பற்றி பேசுவதை விடுத்து என்ன பேச வேண்டுமோ அதனை பற்றி பேசு என கூறினார். அதன் பின்னர் பேசிய அருணா, அண்ணாவின் கைதட்டகளையும் பாராட்டையும் பெற்றார்.
விளங்க மாட்டான்
இவளோ விஷயத்தை வைத்து கொண்டு தான் என்னை புகழ்ந்து பேசுனியா என கேட்டுக்கொண்டார். என அண்ணா நினைவை பகிர்ந்த்து கொண்டார்.
முகஸ்துதிக்கு யார் மயங்குகிறானோ அவன் விளங்க மாட்டான். உங்களுக்கு எல்லாம் எவன் எழுதி கொடுக்கிறானு தெரியல. இந்த மன்றத்திற்கு மரியாதை உண்டு . கண்ணியத்துடன் சொல்கிறேன். எம்.எல்ஏக்கள் உங்கள் தலைவரை புகழ்ந்து பேச வேண்டாம். அது சட்டமன்றத்துக்கு அழகல்ல எனக் கூறினார்.