ருமேனியாவில் தலைகீழாக கட்டப்பட்ட வீடு - வியக்க வைக்கும் புகைப்படம் வைரல்
ருமேனியா, அவ்ரிக் நகரத்தில் ஃபேகராஸ் மலையடிவாரம் உள்ளது. இந்த மலையடிவாரத்தில் பிராம்புரா அட்வென்ச்சர் பார்க் உள்ளது.
தலைகீழாக கட்டப்பட்ட வீடு
இந்த பார்க்கிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர ஒரு வீடு தலைகீழாக கட்டப்பட்டுள்ளது.
இந்த தலைகீழாக கட்டப்பட்ட வீட்டை கண்டு அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், வீட்டிற்குள் வைக்கப்பட்ட பொருட்கள் கூட தலைகீழாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த வீடு 7 டிகிரி சாய்வாக கட்டப்பட்டிருக்கிறது. மேலும், பார்க்கை சுற்றி உணவகம், மதுபான பார், சிறிய உயிரியல் பூங்கா மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் பல விளையாட்டு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
தற்போது, தலைகீழாக கட்டப்பட்ட இந்த வீட்டின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Dizzying new upside down house draws crowds https://t.co/xmglk05LHu pic.twitter.com/EO9x6oAjSN
— Zyite (@ZyiteGadgets) June 17, 2022
